உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், 131 450 என்ற எண்ணில் மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை அழைக்கவும்.
நீங்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
கோவிட்-19 நோய்த்தொற்றினால் மக்கள் மிகவும் நோய்வாய்ப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதில் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை. இந்த வைரசுக்கு எதிரான அதிகபட்சப் பாதுகாப்பை உறுதிசெய்ய தடுப்பூசிகளைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது எப்படி
தடுப்பூசிகள் பின்வரும் இடங்களில் கிடைக்கின்றன:
- பொது மருத்துவர்கள் (GPs)
- பொதுமருத்துவ சுவாச
- மருந்தகங்கள்
- சமூக சுகாதார சேவைகள்.
உங்களுக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு எத்தனை மருந்தளவுகள் தேவை என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலோ, நீங்கள் ஒரு பொது மருத்துவரிடம் (GP) பேச வேண்டும்.
தடுப்பூசிகள் இலவசம், தடுப்பூசி போடுவதற்கு உங்களுக்கு 'மெடிகேர்' அட்டை (Medicare card) தேவையில்லை.
யார் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்
5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான தகுதியுடையவர்களாவர். 6 மாதங்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட சில குழந்தைகள் பின்வரும் சூழ்நிலைகளில் தடுப்பூசிக்குத் தகுதியுடையவர்களாவர்:
- நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருந்தால் (immunocompromised)
- உடல் ஊனமுற்றிருந்தால்
- பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால்.
‘ஓமிக்ரான்’ (Omicron) திரிபுகளை இலக்காகக் கொண்ட ஒரு புதிய இருதிற (bivalent) தடுப்பூசியானது, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் ஒரு நோயெதிர்ப்பு ஊக்க மருந்தளவாகக் (booster dose) கிடைக்கிறது.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எத்தனை மருந்தளவுகள் தேவை மற்றும் எந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது என்பதைப் பற்றி பொது மருத்துவரிடம் (GP) பேசவும். மேலதிகத் தகவல்களுக்குத் தடுப்பூசி என்ற பக்கத்துக்குச் செல்லவும்.
உங்கள் தடுப்பூசிக்குப் பிறகு
ஊசி போட்ட இடத்தில் வலி, சோர்வு, தசைவலி, காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் மற்றும் மூட்டு வலி போன்ற பக்க விளைவுகள் உங்களுக்கு இருக்கலாம். பக்க விளைவுகள் இயல்பானவை, அவை தடுப்பூசி செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும். அவை பொதுவாக இலேசானவை, அத்துடன் ஒரிரு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும்.
கடுமையான பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை. உங்களுக்குக் கவலை இருந்தால் அல்லது ஒரு சில நாட்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் ஏதேனும் நீங்கவில்லை என்றால், உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி
அனைத்து தடுப்பூசிகளும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்கு முன், 'ஆஸ்திரேலிய சிகிச்சை பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட, கடுமையான பாதுகாப்பு தரநிலைளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவை தகுதிவாய்ந்த சுகாதார மருத்துவர்களால் போடப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில், 4 தடுப்பூசிகள் கிடைக்கின்றன மற்றும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன:
- ‘ஃபைசர்’ (Pfizer)
- 'மாடர்னா' (Moderna)
- 'நோவாவேக்ஸ்' (Novavax)
- 'அஸ்ட்ராஜெனெகா' (AstraZeneca)
மக்கள் தங்கள் வயது மற்றும் மருத்துவ நிலைமை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு தடுப்பூசிகளைப் பெறலாம். எந்தத் தடுப்பூசி உங்களுக்குச் சரியானது என்பதை அறிந்துகொள்ளப் பொது மருத்துவர் (GP) ஒருவரிடம் பேசவும்.
மேலதிகத் தகவல்கள்
தடுப்பூசி மருத்துவ நிலைய பயன்படுத்தி உங்கள் அடுத்த மருந்தளவைப் பெற பொது மருத்துவரிடம் (GP) அல்லது உள்ளூர் மருந்தகம் ஒன்றில் முன்பதிவு செய்துகொள்ளவும். மேலதிகத் தகவல்களுக்கு, தேசிய கொரோனாவைரஸ் உதவி இணைப்பை 1800 020 080 என்ற எண்ணில் அழைக்கவும்.
Reviewed 12 December 2022