vic_logo
coronavirus.vic.gov.au

கல்வி (Education) - தமிழ் (Tamil)

கொரோனா வைரசு (கொவிட்-19) காலப்பகுதியில் கல்வியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், அத்துடன் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான ஆதரவு.

‘கல்வி - பெற்றார், மாணவர் மற்றும் கல்விபுகட்டுவோருக்கான எமது தகவல்கள்’ பக்கத்தில் (Education – information for parents, students and educators page) இல் அதிகளவான தகவல்களை நீங்கள் ஆங்கிலத்தில் காணலாம்.

உங்களது மொழியில் அதிகளவு ஆதரவு உங்களுக்குத் தேவைப்பட்டால், 131 450-இல் TIS National-ஐ நீங்கள் அழைத்து, ஒரு உரைபெயர்ப்பாளரைத் தருமாறு கேட்கலாம், பின்னர் 1800 338 663-இல் கொரொனா வைரசு (கொவிட் - 19) க்கான நேரடிதொலைபேசிக்கு இணைப்பை ஏற்படுத்துமாறு கேட்கலாம்.

இந்தக் கொரோனாவைரஸ் (COVID-19) பரவல் காலத்தில் உங்கள் குழந்தைகளோடு பேச வேண்டியவை (Talking to your child about coronavirus)

கொரோனாவைரஸ் (COVID-19) பற்றி உங்கள் குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் ஒரு உரையாடலை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும் இந்தக் கையேடு உங்களுக்கு உதவும், மேலும் பல பயனுள்ள இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கொரோனாவைரஸ் பற்றிப் பேசப் பயப்படாதீர்கள் (COVID-19)

  • பெற்றோர்களும் சரி குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தாதிகளும் சரி இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கக்கூடாது. பெரும்பாலான குழந்தைகள் ஏற்கனவே வைரஸைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள்.
  • இதைப் பற்றி நீங்கள் பேசமால் இருப்பதுதான் குழந்தைகளை மேலும் கவலையடையச் செய்யும். நண்பர்கள் மூலமோ சமூக ஊடகங்கள் மூலமோ அவர்கள் இதைத் தெரிந்து கொள்வதை விட, நம்பகமான தகவல்களைக் கொண்டு நீங்கள் கூறும் உண்மைகள் மூலம் அவர்கள் தெரிந்து கொள்வது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுப்பதை உறுதியளிக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் கூறுங்கள்

  • உங்கள் குழந்தையின் வயதிற்கு ஏற்ப அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகத் தகவல்களைக் கூறுங்கள்.
  • எல்லாவற்றிற்கும் நீங்கள் பதிலளிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை,  அவர்களின் சந்தேகங்களையும் மற்ற விசயங்களையும் கேட்க நீங்கள் இருக்கிறீர்கள் என்ற உணர்வை அவர்களுக்குக் கொடுங்கள்.
  • உண்மையாகவும் தெளிவாகவும் பதிலளிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். ஒரே நேரத்தில் அதிகமான தகவல்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் அது அவர்களை குழப்பமடையச் செய்யலாம்.
  • உங்கள் குழந்தையுடன் பேசும்போது நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • உங்கள் குழந்தை மேலும் கவலைப்படக்கூடிய வகையில் பேசுவதைத் தவிருங்கள்.

குழந்தைகளிடமும் கேளுங்கள்

  • COVID-19 பற்றி உங்கள் குழந்தை கேள்விப்பட்டவைகளையும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சொல்லுமாறு அவர்களிடம் கனிவாகக் கேளுங்கள்.
  • கேள்வி கேட்க அவர்களை அனுமதியுங்கள். கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருங்கள் மற்றும் உங்கள் குழந்தையோடு ஒன்றாக அமர்ந்து பேசுங்கள்.
  • சில குழந்தைகள் தங்களை விட மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். Facetime போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முடிந்தவரை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உங்கள் குழந்தைகள் இணைந்து இருக்கட்டும்.

பயத்தைப் போக்கிடுங்கள்

  • உங்கள் குழந்தைகளுடன் பேசும் போதும் சரி பிறருடன் நீங்கள் பேசும் போதும் சரி என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். பெரியவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • உங்கள் குழந்தையின் அச்சங்களை வெறுமனே கடந்து போக வேண்டாம். அவர்கள் கவலைப்படுவது நியாயமானது, ஏனென்றால் அவர்கள் இதற்கு முன்பு இது போன்ற எதையும் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை.
  • COVID-19 வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அந்த வைரஸ் பற்றி மேலும் அறிந்திடவும் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்கள் குழந்தைக்குச் சொல்லுங்கள்.

பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்

  • என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கும் கொஞ்சம் பொறுப்பைக் கொடுங்கள். சமூக இடைவெளி, கை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் அவற்றை எவ்வாறு சரியாகச் செய்வது என்பது பற்றியும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.  இருமலோ தும்மலோ வந்தால் மற்றவர்களின் பாதுகாப்பு கருதி, சுற்றி இருக்கும் யாரையும் பாதிக்காத வண்ணம் இருமவோ தும்மவோ வேண்டும் என்பதையும்  அது அவர்களின் பொறுப்பு என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.
  • முகத்தில் மாஸ்க் அணிந்தவர்களைக் குழந்தைகள் பார்த்தால், அந்த நபர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக அப்படி மாஸ்க் அணிந்திருக்கிறார்கள் என்பதை விளக்குங்கள், அதே நேரத்தில் பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய மாஸ்க்குகள் தேவையில்லை என்பதையும் விளக்கிடுங்கள்.
  • குழந்தைகளிடம் அவர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினர்களோ பாதுகாப்பற்றவர்களாக இருந்தால் 000 என்ற எண்ணிற்கு அவர்கள் அழைக்க வேண்டும் என்பதை நினைவூட்டுங்கள்.

வழக்கத்தைப் பின்பற்றிடுங்கள்

  • உணவு நேரம் மற்றும் படுக்கை நேரங்களைத் திட்டமிட்டு அதை வழக்கமாக்குவது குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஒரு முக்கியப் பகுதியாகும்.
  • உங்களால் முடிந்தவரை, ஒரு வழக்கத்தைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். ஒவ்வொருவரும் அவரவர்களின் தினசரி வழக்கமான வேலைகளைச் செய்ய ஒரு கால அட்டவணையை உருவாக்கி, அதை அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒட்டி வைக்கவும்.
  • வெளி நேரம், விளையாட்டு நேரம், வீடியோ கேம்ஸ் போன்றவற்றிற்கான நேரம், புதுமையாக எதையாவது செய்வதற்கான நேரம் மற்றும் கற்றலுக்கான நேரம் என்பன போன்றவைகளை அதில் சேர்க்கவும்.
  • உங்கள் குழந்தையின் தேவைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப கொஞ்சம் முன்பின் விட்டுக்கொடுத்து அவர்களோடு ஒத்துச் செல்லுங்கள்.

தொடர்ந்து பேசுங்கள்

  • உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே தெரிந்தவைகள் என்ன அல்லது அவர்கள் கவலைப்படும் விசயம் என்ன என்பதைக் கண்டறியவும். அவர்கள் தவறான தகவல்களைக் கேட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
  • ஆம் அல்லது இல்லை போன்ற பதில்களுக்கான கேள்வியாக இல்லாமல் தெளிவாகக் கேள்விகளைக் கேளுங்கள்.
  • உங்கள் குழந்தை உங்களிடம் ஏதாவது கேட்டால், உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்றால், பதில் தெரியவில்லை என்று கூறுங்கள். அதற்கான பதில்களை சேர்ந்து கண்டறியும் வகையில் கேள்விகளை நீங்கள் கேளுங்கள்.
  • உங்கள் பிள்ளைகள் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் நிறைய கேள்விகளைக் கேட்கவில்லை என்றாலும் அதுவும் பிரச்சனையில்லை, சரி என்று அப்போதைக்கு விட்டுவிடுங்கள்.
  • அவர்கள் சொல்வதைக் கேட்க நீங்கள் எப்போதும் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் நாம் தொடர்ந்து பேசுவோம் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்திடுங்கள்.

கவனமுடன் பேச்சை முடியுங்கள்

  • குழந்தைகள் குழம்பிய நிலையிலோ கவலைப்படும் நிலையிலோ பேச்சை முடிக்காதீர்கள்.
  • நீங்கள் பேச்சை முடிக்கும் போது, அவர்கள் குழம்பியது அல்லது கவலைப்படுவது போன்று ஏதேனும் அறிகுறிகள் தெரிகிறிதா என்று உற்றுக் கவனியுங்கள். அவர்கள் குரலில் மாற்றம், மூச்சு விடுவதில் மாற்றம் அல்லது உடல் அசைவுகளில் மாற்றம் என எதுவாகவும் இருக்கலாம்.

உங்கள் குழந்தைகளிடம் கவனிக்க வேண்டியவை

குழந்தைகள் அல்லது இளம் வயதினர் மனஅழுத்தத்தில் இருப்பது போன்ற சில அறிகுறிகளைக் காட்டுவது சாதாரணம்தான். பொதுவாக இவ்வாறாக இருக்கும்:

  • பயம் மற்றும் பதற்றம் 
  • கோபம், எரிச்சல் மற்றும் குழப்பம்
  • கவலை
  • மறுத்தல்

உங்களையும் கவனியுங்கள்

  • நீங்கள் பதற்றமாக இருப்பதாக உணர்ந்தால், குழந்தைகளிடம் பேசும் முன்பு அல்லது அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லும் முன்பு உங்களை முதலில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் பதற்றமாக இருந்தால், சில தகவல்களை அறிந்து கொண்டு பின்னர் வந்து பேசுகிறேன் என்று குழந்தையிடம் கூறுங்கள்.
  • உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான தகவல்களைக் கொண்ட சில இணைப்புகள்:
    • headspace – குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்காக
    • Beyondblue – COVID19
    • Lifeline – COVID-19 பரவல் காலத்தில் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம்

கூடுதல் இணைப்புகள்

உங்கள் குழந்தையிடம் எப்படிப் பேசுவது என்பதற்கான குறிப்பு

  • Raising Children Network கொரோனாவைரஸ் (COVID-19) மற்றும் ஆஸ்திரேலியக் குழந்தைகள்
  • Emerging Minds – கொரோனாவைரஸ் தொற்று பரவல் காலத்தில் குழந்தைகளுக்கான ஆதரவு
  • KidsHealth – கொரோனாவைரஸ் (COVID-19): உங்கள் குழந்தையிடம் பேசுவது எப்படி
  • eSafety அலுவலகம்:
    • COVID-19: keeping schools and learning safe online
    • COVID-19: an online safety kit for parents and carers

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரோடு பகிர்வதற்கானவை

  • headspace – நோவல் கொரோனாவைரஸ் சம்பந்தமான மன அழுத்தங்களை எப்படிக் கையாள்வது
  • ReachOut – கெரோனாவைரஸ் பரவல் காலத்தில் அதை எப்படிக் கையாள்வது

குழந்தை பராமரிப்பு மற்றும் மழலையர் பள்ளிக்குத் திரும்பச் செல்லுதல் (Returning to child care and kindergarten)

அக்டோபர் 5 திங்கள் முதல்.

மெல்போர்ன் மாநகரம் மற்றும் பிராந்திய மற்றும் கிராமப்புற விக்டோரியா முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகளும்

  • குழந்தை பராமரிப்பு (நீண்ட நாள்வேளைப் பராமரிப்பு அல்லது இல்ல நாள்வேளைப் பராமரிப்பு) மையத்துக்கு திரும்பச் செல்லலாம் மற்றும்
  • வகுப்பில் மழலையர் பள்ளி அமர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

இது விக்டோரியாவைத் திறப்பதற்கான விக்டோரியன் அரசாங்கத்தின் மூன்றாவது கட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த முயற்சிகள் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று கொண்டவர்களின் எண்ணிக்கையின் குறைவைப் பொறுத்தது.

விக்டோரியன் தலைமைச் சுகாதார அதிகாரியின் ஆலோசனையின் பேரில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களிடம் உள்ள அறிவுரை என்னவென்றால், குழந்தை பராமரிப்பு மற்றும் மழலையர் பள்ளி ஆகியவை கொரோனா வைரஸ் (COVID-19) பெரிதும் இல்லாத, குறைந்த அபாயமுள்ள பாதுகாப்பான இடங்கள்.

இதை எங்களுக்குத் தெரிவித்தது

  • விக்டோரியன் தலைமைச் சுகாதார அதிகாரி மற்றும்
  • ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு (AHPPC).

குழந்தை பராமரிப்பு மற்றும் மழலையர் பள்ளிகளில் ஆன்-சைட் வருகைக்கான மாற்றங்கள் லாக்-டவுன் விதிகளின்

ஒரு பகுதியாக செய்யப்பட்டன. இந்த விதிகளால் மிகவும் குறைவான மக்கள் நடமாட்டம் சமூகத்தில் இருக்கும். ஆனால் இந்த விதிகள்

குழந்தைகள் அல்லது ஊழியர்களுக்கு, குழந்தை பராமரிப்பு மற்றும் மழலையர் பள்ளிகள் பாதுகாப்பற்ற இடங்கள் என்பதால் மேற்கொள்ளப்பட்டவை அல்ல.

உங்கள் குழந்தை பராமரிப்பு அல்லது மழலையர் பள்ளி ஒரு COVIDபாதுகாப்பு திட்டத்தைக் கொண்டிருக்கும். இதில், வழக்கமான பணிகளான அறை மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்யும் போது சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்பதும் அடங்கும்.

குழந்தை பராமரிப்பு அல்லது மழலையர் பள்ளிக்குச் செல்வது எல்லா குழந்தைகளுக்கும் முக்கியம். அது அவர்களின் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு அவசியமாவதால், அவர்கள் நிச்சயம் அதில் பங்கேற்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில் உங்கள் பிள்ளை பிரெப்பைத் தொடங்கத் தயாராக இது மிகவும் முக்கியம்.

2021 ஆம் ஆண்டில் பிரெப் தொடங்கும் குழந்தைகளுக்கு பள்ளிகள் தயாராக இருக்கும் (Schools will be ready for children starting Prep in 2021)

2021 ஆம் ஆண்டில் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தையை பிரெப்புக்கு மாற்றுவதற்கு மழலையர் பள்ளிகளும், பள்ளிகளும் ஒன்றிணைந்து

உங்களுக்கு உதவுகின்றன.

பள்ளியில் பருவம் 1 இல், இந்த ஆண்டு திட்டமிட்டபடி பள்ளிக்குச் செல்ல முடியாத நான்கு வயது மழலையர் குழந்தைகளுக்கு உதவுப்படும்.

பிரெப் 2021 க்காக குழந்தைகளை தயார்படுத்துவதற்குப் பள்ளிகள் பல விஷயங்களைச் செய்கின்றன, அவற்றுள்:

  • ஆன்லைனில் பள்ளி மற்றும் வகுப்பறைப் பயணங்கள்
  • ‘பள்ளியின் முதல்வரை சந்திக்கவும்’ வீடியோக்கள்
  • ‘பிரெப் குழுவைச் சந்திக்கவும்’ வீடியோ கலந்தாய்வுகள்
  • மழலையர் பள்ளி மற்றும் பிரெப் ஆசிரியர் சந்திப்புகள்
  • 5 வயது மாணவர்களுக்கு பிரெப் நண்பர்களாக இருக்க பயிற்சி.

2021 ஆம் ஆண்டில், பள்ளியில் உங்கள் குழந்தை பிரெப்பைத் தொடங்க நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால், இப்போதே பள்ளிகளைப் பார்க்க நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். உங்கள் குழந்தையை கூடிய விரைவில் சேர்ப்பது நல்லது. கல்வி மற்றும் பயிற்சித் துறை, தனது  இணையதளத்தில், பள்ளி தொடங்குவது குறித்த பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் பிரெப் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி உங்கள் குழந்தையின் பள்ளியில் உள்ள ஊழியர்களுடன் நீங்கள் பேச வேண்டும்.

உங்கள் குழந்தையின் மழலையர் பள்ளி ஆசிரியர் உங்கள் குழந்தை, மழலையர் பள்ளியிலிருந்து பள்ளிக்கு மாறுவதைத்

திட்டமிட உதவலாம்.

உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவையா?

9280 1955 ஐ அழைத்து அல்லது இந்த  வலைத்தளத்த்தின் மூலம் உங்கள் மழலையர் பள்ளியை ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க கேட்கலாம்.

ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் (Things you can do to stay healthy and safe)

உங்கள் குழந்தை பராமரிப்பு அல்லது மழலையர் பள்ளி உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்

  • ஒவ்வொரு நாளும் குழந்தைகள் மையத்திற்கோ அல்லது மழலையர் பள்ளிக்கோ வரும்போது அவர்களின் வெப்பநிலையை சரிபார்க்கிறது
  • கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களைத் தவறாமல் சுத்தம் செய்தல்
  • முகக்கவசம் அணியுமாறு பெரியவர்களைக் கேட்டுக்கொள்வது
  • உடல்நிலைச் சரியில்லாத குழந்தைகள் அல்லது பெற்றோர்களை வீட்டில் தங்குவதற்கு ஊக்குவித்தல். கொரோனா வைரஸுக்கு (COVID-19) பரிசோதனைச் செய்ய அவர்கள் உங்களை ஊக்குவிப்பார்கள்.

வீட்டிலேயே முறையான சுகாதாரம் கடைப்பிடிப்பது பற்றி உங்கள் குடும்பத்தினருடன் பேசும்படி கேட்டுக்கொள்கிறோம்

  • குழந்தை பராமரிப்பு அல்லது மழலையர் பள்ளிக்கு வருவதற்கு முன்பு உங்கள் கைகளைக் கழுவுவது  அல்லது ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்துவது
  • குழந்தை பராமரிப்பு அல்லது மழலையர் பள்ளி உட்பட நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் எந்த நேரத்திலும் முகக்கவசம் அணிவது
  • உங்களுடன் வசிக்காதவர்களிடமிருந்து 1.5 மீட்டர் தொலைவில் இருப்பது. இதில், உங்கள் குழந்தை பராமரிப்பு அல்லது மழலையர் பள்ளியின் பணியாளர்கள் மற்றும் பிறக் குடும்பங்களும் அடங்கும்
  • இருமல் மற்றும் தும்மலின் போதும் ஒரு டிஷ்யூ அல்லது உங்கள் முழங்கையைப் பயன்படுத்துவது. இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு எப்போதும் கைகளைக் கழுவுவது
  • உங்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தால் வீட்டில் தங்குவது. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், நீங்கள் கொரோனா வைரஸுக்கு (COVID-19) பரிசோதிக்கப்பட வேண்டும். நீங்கள் மீண்டும் உடல்நிலை சரியாகும் வரை வீட்டிலேயே இருங்கள்.

Reviewed 17 November 2020

24/7 Coronavirus Hotline

If you suspect you may have coronavirus (COVID-19) call the dedicated hotline – open 24 hours, 7 days.

Please keep Triple Zero (000) for emergencies only.

Was this page helpful?