vic_logo
coronavirus.vic.gov.au

பிரயாணம் மற்றும் போக்குவரத்து (Travel and transport) - தமிழ் (Tamil)

பொதுப் போக்குவரத்து, தொற்றுத் தடைகாப்பு, அத்துடன் மாநிலங்களுக்கிடையிலான மற்றும் வெளிநாடுகளுக்கான பிரயாணம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கண்டறியவும்.

உங்கள் மொழியில் அதிக உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால், 131 450 இல் நீங்கள் TIS National-ஐ அழைத்து ஒர் உரைபெயர்ப்பாளரைத் தருமாறு கேட்கலாம்,  பின்னர் 1800 800 007 இல் விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அழைப்பு நிலையத்தோடு (Public Transport Victoria call centre) இணைக்குமாறு கேட்கவும்.

பயணம் பற்றிய புதிப்பிக்கப்பட்ட தற்போதைய தகவல்கள்

2021 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை இரவு 11:59 மணி முதல், நீங்கள் ஒரு சிவப்பு மண்டலத்திலிருந்து விக்டோரிய மாநிலத்துக்குள் நுழையத் திட்டமிடுகிறீர்கள் என்றால், தயவுசெய்து பின்வருவனவற்றைக் கவனிக்கவும்:

  • சிவப்பு மண்டல அனுமதிகளை வழங்குவதைத் தலைமைச் சுகாதார அதிகாரி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
  • 2021 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை இரவு 11:59 மணிக்குப் பிறகு நீங்கள் விக்டோரிய மாநிலத்துக்குள் நுழைய விரும்பினால், மேலும் நுழைவதற்கு முன்னால் 14 நாட்கள் நீங்கள் சிவப்பு மண்டலம் ஒன்றில் இருந்திருந்தால், விக்டோரிய மாநிலத்துக்குள் நுழைய உங்களுக்கு ஒரு சிறப்பு விலக்களிப்பு, விதிவிலக்கு அல்லது தகுதி அடிப்படையிலான அனுமதி தேவைப்படும். இது விக்டோரிய மாநிலத்தில் குடியிருப்பவர்களுக்கும் பொருந்தும்.

    • சிறப்பு விலக்களிப்புகள்: சிறப்பு விலக்களிப்புக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். பராமரிப்பு மற்றும் கருணை அடிப்படையிலான காரணங்கள் உள்ளிட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே சிறப்பு விலக்களிப்புகள் வழங்கப்படுகின்றன.

    • விதிவிலக்குகள்: குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமே விதிவிலக்குகள் பொருந்தும் (எடுத்துக்காட்டாக, விமான ஊழியர்களுக்கு, அல்லது ஓர் அவசரகாலச் சூழ்நிலையில் நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், அல்லது நீங்கள் தீங்கிலிருந்து தப்பிக்கிறீர்கள் என்றால்).

    • தகுதி அடிப்படையிலான அனுமதிகள்: தகுதி அடிப்படையிலான அனுமதிகளில், விக்டோரிய மாநிலம் வழியாக மற்றொரு அதிகார எல்லைக்குச் செல்லும் நபர்களுக்கான மாற்றுப் பயண அனுமதி, மற்றும் குறிப்பிட்ட தொழிலாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலாளர்களுக்கான குறிப்பிட்ட தொழிலாளர் அனுமதிகள் ஆகியவை அடங்கும்.

  • சிறப்பு விலக்களிப்பு, விதிவிலக்கு அல்லது தகுதி அடிப்படையிலான அனுமதி போன்றவை இல்லாமல் நீங்கள் விக்டோரிய மாநிலத்துக்குள் நுழைய முயற்சித்தால், உங்களுக்கு 5452 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். மேலும், நுழைவு மறுக்கப்படக்கூடும், அல்லது நீங்கள் உங்கள் சொந்தச் செலவில் 14 நாட்களுக்குத் தங்கும் விடுதியில் நோய்த் தொற்றுத் தடைகாப்பில் (hotel quarantine) வைக்கப்படுவீர்கள்.

  • நீங்கள் இடைவழிப் பயணம் மேற்கொள்ளும் பயணி (transiting traveller) என்றால், நியூ சவுத் வேல்சில் தற்போது தீவிரத்தொற்றுப் பரவல் (outbreak) உள்ளது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். சிட்னி பெருநகரில் (Greater Sydney), நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்பட்ட உயர் சமூகப் பரவல் உள்ள பகுதிகள் வழியாகப் பயணம் செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் இந்தப் பகுதிகள் வழியாகக் கட்டாயம் சென்றாக வேண்டும் என்றால், உங்கள் பயணத்தை முன்கூட்டியே நீங்கள் திட்டமிட வேண்டும். இதனால், முடிந்தவரை, இந்த இடங்களில் நீங்கள் எரிபொருள், உணவு அல்லது ஓய்வு போன்றவைகளுக்காக நிறுத்த வேண்டியிருப்பதைத் தவிர்க்கலாம்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தற்போதைய சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களைப் பற்றிய தகவல்களைக் காண, பயணம் பற்றிய புதிப்பிக்கப்பட்ட தகவல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.

விக்டோரிய மாநிலப் பயண அனுமதித் திட்டம் (Victorian Travel Permit Scheme)

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் எந்த இடத்திலிருந்தும் விக்டோரியாவிற்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அனுமதித் திட்டமானது இன்னொரு மாநிலத்திலிருந்து வீடு திரும்பும் விக்டோரிய மாநில மக்கள் மற்றும் பயணிகளுக்கானதாகும்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் பிற பகுதிகளை, அப்பகுதிகளில் உள்ள கொரோனா வைரசின் அபாயத்தைப் பொறுத்து, பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு என விக்டோரியா வகைப்படுத்துகிறது.

இந்த அனுமதிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் மற்றும் எந்த இடத்திற்குப் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் பற்றிய விபரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்.

மாநில எல்லைப் பகுதிகளில் வாழும் சமூகத்தினருக்கு அனுமதி எதுவும் தேவைப்படாது, ஆனாலும் எல்லையில் உள்ள அவர்களுடைய வீட்டின் விலாசதிற்கான ஆதாரம் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டியிருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

‘விக்டோரிய சேவைகள்’ (Service Victoria) மூலமாக விண்ணப்பியுங்கள்

பயண அனுமதிப் பகுதிகள்

சிவப்பு மண்டலம் என்றால் நீங்கள் விக்டோரிய மாநிலக் குடியிருப்பாளராக இல்லாவிட்டால், விக்டோரியாவிற்குள் நுழையமுடியாது. நீங்கள் விக்டோரிய மாநிலக் குடியிருப்பாளராக இருந்து சிவப்பு மண்டலத்தில் இருந்து நுழைந்தால், நீங்கள் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். Specified Worker அல்லது Freight Workers ஆகியோருக்கான அனுமதி, அல்லது விதிவிலக்கு அனுமதி அல்லது கருணை அனுமதி போன்ற ஏதேனும் ஒன்றை வைத்திருத்தால் நீங்கள் உள்ளே நுழையலாம். விதிவிலக்கு அல்லது வேலை அனுமதி ஒன்று இல்லாமல் நீங்கள் ‘சிவப்புப் பகுதியில்’ இருந்து உள்ளே நுழைந்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும், அத்துடன் நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்.

‘ஆரஞ்சுப் பகுதி’ எனில் நீங்கள் அனுமதி ஒன்றிற்காக விண்ணப்பிக்கலாம் என்பதாகும்., மேலும் விக்டோரிய மாநிலத்திற்கு வந்து சேர்ந்த 72 மணி நேரத்திற்குள்ளாக நோயறிவுச் சோதனை ஒன்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் குறிக்கும். நோயறிவுச் சோதனைக்கு முன்பும் அதற்குப் பிறகும், உங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்ற முடிவை நீங்கள் பெறும் வரை, நீங்கள் கண்டிப்பாக வீட்டிலேயே இருந்தாக வேண்டும்.

‘பச்சைப் பகுதி’ எனில் பயண அனுமதி ஒன்றிற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம், மற்றும் விக்டோரிய மாநிலத்திற்குள் நீங்கள் நுழையலாம் என்பதைக் குறிக்கும். விக்டோரிய மாநிலத்திற்கு நீங்கள் வந்த பிறகு, உங்களுக்கு நோயறிகுறிகள் இருக்கின்றனவா என்று நீங்கள் அவதானித்து வர வேண்டும், மற்றும் உங்களுக்கு உடல் நலம் இல்லாததுப் போல இருந்தால் நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளவேண்டும்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சிவப்பு, ஆரஞ்சு அல்லது பச்சை மண்டலப் பகுதிகளைக் காண the Victorian Travel Permit System page -இல் உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்.

அனுமதிக்கான விதிவிலக்குகள்

ஏற்கத்தக்கக் காரணம் ஒன்று இருந்தால், விதிவிலக்கு அனுமதி ஒன்றிற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம். பின்வருவன இதில் உள்ளடங்கலாம்:

  • எவரேனும் உயிர் இழக்கும் நிலை அல்லது இறுதிச்சடங்கிற்காக
  • உடல் நலம், பொதுநலம், பராமரிப்பு அல்லது கருணை அடிப்படையிலான காரணங்கள் ஆகியவற்றை முன்னிட்டு வீட்டிற்குத் திரும்பிவரல்
  • அவசரகால இடப்பெயர்வு
  • மாநில எல்லைக்கு அப்பால் இருக்கும் விலங்கின் நலனுக்காக.

Reviewed 22 July 2021

24/7 Coronavirus Hotline

If you suspect you may have COVID-19 call the dedicated hotline – open 24 hours, 7 days.

Please keep Triple Zero (000) for emergencies only.

Was this page helpful?